வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?
2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?
3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்
மாவட்டம் எது ?
4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?
5.ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?
6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் ?
7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?
9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
10.எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?
பதில்கள்:
1.நர்மதை, 2.தமிழ்நாடு,3.கோயம்புத்தூர்,4.பஞ்சாப்,
5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,
8.மகாநதிச் சமவெளி,9.சென்னை,10.மும்பை
இன்று ஜூலை 31

பெயர் : செய்குத்தம்பி பாவலர்,
பிறந்தததேதி : ஜூலை 31, 1874
தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச்
சிறந்தோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்
பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய
சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக
நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து
விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான
செயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும்
கலையில் சிறந்து விளங்கியவர்.
No comments:
Post a Comment